இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்! இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே அசத்தல்! - Seithipunal
Seithipunal


பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில், 117 பேர் கொண்ட இந்திய அணி, 16 விளையாட்டுகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்தியாவின் பதக்க கணக்கை துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று தொடங்கி வைத்தார்.

மேலும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவு வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில், மனுபாக்கர் - சரப்ஜோத் சிங் ஜோடி தென்கொரியாவின் யெஜின்-வோன்ஹோலீ ஜோடியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.

மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி சிறப்பாக தங்களது திறமையை வெளிப்படுத்தி, 16-10 என்ற கணக்கில் கொரியா ஜோடியை வீழ்த்தியதன் மூலம், இந்தியாவுக்கு 2-வது பதக்கம் கிடைத்தது. 

மேலும், ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனையாக மனுபாக்கர் சாதனை புரிந்துள்ளார்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் இன்று கிடைத்துள்ளது.

50 மீட்டர் 3பி துப்பாக்கி சூடுதல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. 

50 மீட்டர் 3பி துப்பாக்கி சூடுதல் ஆடவர் ஒற்றையர் பிரிவில், வெண்கல புத்தகத்திற்கான ஆட்டத்தில், இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வென்று வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

இதன் மூலம் இந்தியாவிற்கு மூன்று பதக்கம் இதுவரை கிடைத்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paris Olympics India 3rd medal 2024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->