புரோ கபடி, தமிழ் தலைவாஸ் அசத்தல் வெற்றி.!
Pro Kabadi Thamizg Thalaivas Won
நடப்பு புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி 5 வது வெற்றியை பெற்றுள்ளது.
12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் பெங்களூரூவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற 90-வது லீக் ஆட்டத்தில், முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் அணி 36-30 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தியது. இதன்மூலம் ஜெய்ப்பூர் அணி நடப்பு சீசனில் 7-வது வெற்றியை பெற்றது.
நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஆரம்பம் முதலே மிகுந்த ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் அணி, ஆட்ட நேர இறுதியில் 43-25 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதன் மூலம் நடப்பு தொடரில் தமிழ் தலைவாஸ் அணி 5-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இன்று மாலை அரியானா மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகளும், டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளும் குஜராத் மற்றும் பாட்னா அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
English Summary
Pro Kabadi Thamizg Thalaivas Won