சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி! அரை இறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து.! - Seithipunal
Seithipunal


சுவிட்சர்லாந்து வந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடரில் இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் பிரனோய் ஆகியோர் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இன்றைய மகளிர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து கனடா வீராங்கனை மிச்செல் லீயை எதிர்கொண்டார். அதில் 21-10, 21-19 என்ற நேர்செட்களில் லீயை வீழ்த்தினார்.

ஆடவர் பிரிவில் பிரனோய், 21-16, 21-16 என்ற நேர்செட்களில் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற காஷ்யப்பை  வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

பி.வி.சிந்து அடுத்து நாளை நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில், தாய்லாந்தின் சுபநிதா கேட்டோங்கை எதிர்கொள்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PV Sindu Qualified for Semifinal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->