தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி.! அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து.! - Seithipunal
Seithipunal


தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டத்தில், ஜப்பான் வீராங்கனை யமாகுச்சியுடன் மோதினார். இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் 21-15 என முதல் செட்டை சிந்துவும், 2ஆவது செட்டை 20-23 என்று ஜப்பான் வீராங்கனையும் கைப்பற்றினர். 

வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஆட்டத்தில் ஆரம்ப முதலே ஆதிக்கம் செலுத்தி கடும் போட்டியை சந்தித்த பி.வி.சிந்து, 21-13 என்ற செட் கணக்கில் யமாகுச்சியை வீழ்த்தினார்.

இதன் மூலம் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறிய பி.வி. சிந்து நாளை சீன வீராங்கனை சென் யுஃபெய்-யுடன் மோத உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PVSindhu qualified for semi final


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->