சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி. சிந்து.!
PVSindu champion in Switzerland open badminton
சுவிட்சர்லாந்து ஓபன் சரவ்தேச பேட்மிண்டன் போட்டித்தொடரில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
சுவிட்சர்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டித் தொடரில் பங்கேற்ற பி.வி.சிந்து ஆரம்ப போட்டியில் இருந்தே சிறப்பாக விளையாடி வந்தார்.
இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், தாய்லாந்தைச் சேர்ந்த பூசனனை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே மிகுந்த ஆதிக்கத்துடன் விளையாடினார். மொத்தம் 49 நிமிடங்களில் 21-16, 21-8 என்ற செட்கணக்கில் பூசனனை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார்.
பி.வி.சிந்து, இதுவரை பூசனனை 17 ஆட்டங்களில் எதிர்கொண்டு உள்ளார். அவற்றில் 16 முறை பி.வி. சிந்து வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த 2019ல் ஹாங்காங் ஓபன் போட்டித்தொடரில் மட்டும் தோல்வி அடைந்துள்ளார்.
இந்த வெற்றி பி.வி.சிந்துவுக்கு இந்த சீசனில் கிடைத்த இரண்டாவது சாம்பியன் பட்டமாகும். கடந்த ஜனவரி மாதம் லக்னோவில் நடைபெற்ற சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டித்தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்.
English Summary
PVSindu champion in Switzerland open badminton