1997 டெஸ்ட் தோல்வி பற்றி மாஸாக பதிலளித்த ராகுல் டிராவிட் !!
raghul dravids coolest reply ever
உலகக் கோப்பை டி20யில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தனது முதல் சூப்பர் எட்டு போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அணியை தேர்வு செய்வதற்கான சிக்கலை எதிர் கொண்டார். குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரில் ஒருவர் இந்தியாவின் அணியில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அணி நிர்வாகம் முகமது சிராஜை வெளியில் அமர்த்த வேண்டி இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
பார்படாஸில் இந்தியாவின் சூப்பர் எட்டு ஆட்டத்திற்கு முன்னதாக டிராவிட் சமாளிக்க வேண்டிய சிக்கல் அணி தேர்வு பற்றிய கேள்விகள் மட்டுமல்ல. நேற்று நடந்த ரோஹித் சர்மா தலைமையிலான அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளும் மைதானமான கென்சிங்டன் ஓவலில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 1997 டெஸ்ட் தோல்வியை நினைவுபடுத்தியபோது டிராவிட் நிதானமாக பதில் கூறினார்.
அந்த போட்டியை நினைவுபடுத்திய பிறகும் ராகுல் டிராவிட் தனது நிதானத்தை விடவில்லை. நான் எதையும் புதிய மனிதனாக மாற்ற முயற்சிக்கவில்லை. நான் விஷயங்களை மிக விரைவாக நகர்த்துகிறேன். நான் நினைக்கிறேன், இது என்னுடைய விஷயங்களில் ஒன்று.
நான் விஷயங்களைத் திரும்பிப் பார்ப்பதில்லை. நான் இப்போது என்ன செய்கிறேன் என்று பார்க்க முயற்சி செய்கிறேன். 1997 அல்லது வேறு வருடங்களில் என்ன நடந்தது என்பது பற்றி நான் கவலைப்படவில்லை என தனது பாணியில் நிதானமாக பதில் கூறினார்.
கடந்த 1997ஆம் ஆண்டு கரிபியன் தீவுகளில் அமைந்துள்ள பார்படாஸில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 120 ரன்களை இலக்கை இந்தியா சேஸ் செய்தது, 38 ரன்கள் வித்தியாசத்தில் இலக்கை எட்டியது. அந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ராகுல் டிராவிட் 78 ரன்கள் எடுத்திருந்தார்.
ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டத்தின் போக்கு மாறியது, ராகுல் டிராவிட் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இயன் பிஷப் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகளுக்கு மறக்கமுடியாத வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
English Summary
raghul dravids coolest reply ever