பட்டுனு தூக்கி கொடுத்திட்டிங்க! ஜடேஜா VS ரஹானே - சிக்கலை உண்டாக்கிய கங்குலி!
Rahane vc Jadeja NDvsWI Test Cricket Team India
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மீண்டும் துணை கேப்டனாக அஜிங்க்ய ரஹானே நியமிக்கப்பட்டிருப்பது குறித்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது மோசமான ஆட்டத்தால் இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அஜிங்க்ய ரஹானேவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
கடந்த ஐபிஎல் தொடரில், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் தனது திறமையை வெளிப்படுத்திய ரகானா, சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணிக்காக களம் இறங்கி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சொல்லப் போனால் இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் சிறப்பாக ஆடிய வீரர்களின் பட்டியலில் அவருக்கே முதலிடம்.
இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் துணை கேப்டனாக அஜிங்க்ய ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மீண்டும் துணை கேப்டனாக அஜிங்க்ய ரஹானே நியமிக்கப்பட்டிருப்பது குறித்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுரவ் கங்குலி தெரிவித்த கருத்து : அஜிங்க்ய ரஹானே மீண்டும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதை நான் பின்னடைவாக பார்க்கவில்லை.
ஆனால் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா நீண்ட காலமாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரை துணைக் கேப்டனாக நியமித்திருக்கலாம்.
18 மாதங்களுக்குப் பிறகு ஃபார்முக்கு வந்த ஒரு வீரருக்கு உடனடியாக துணை கேப்டன் பதவியை கொடுப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
வீரர்கள் தேர்வில் ஒரு நீண்ட தொடர்ச்சியும், நிலைத்தன்மையும் இருக்க வேண்டும்" என்று கருதுவதாக சவுரவ் கங்குலி தனது கருத்தினை பதிவு செய்து இருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக உங்களின் தேர்வு யாராக இருக்கும்? ரவீந்திர ஜடேஜாவா? அஜிங்க்ய ரஹானேவா?
English Summary
Rahane vc Jadeja NDvsWI Test Cricket Team India