ரிஷப் பண்ட் செய்த காரியம்.. அவரை உட்கார வைத்து பேசுவோம்.! ராகுல் டிராவிட் அதிரடி.!!
rahul dravid press meet about rishabh pant
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதையடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி மோசமாக சொதப்பி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் 2-வது இன்னிங்சில் ரிஷப் பண்ட் பொறுப்புடன் நிலைத்து நின்று விளையாடாமல், 3-வது பந்தில் இறங்கிவந்து விளையாடி ஆட்டமிழந்தார். இதையடுத்து, ரிஷப் பண்ட்-இன் செயலுக்கு அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரிஷப் பண்ட்-இன் செயல் குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ரிஷப் பண்ட் நேர்மையான வீரர். அவர் தைரியமாக, அதிரடியாக விளையாடி பல முறை அணியை வெற்றி பெற செய்துள்ளார். இருப்பினும் அனைத்திற்கும் ஒரு நேரம் காலம் இருக்கிறது. எடுத்ததுமே அதிரடி காட்டுவதை விட்டு, எப்போது அதிரடியாக விளையாட வேண்டும் என்பது குறித்து அவரிடம் அமர்ந்து பேசுவோம். அதற்காக அவருடைய ஆட்டத்தை மொத்தமாக மாற்ற வேண்டும் என கூற மாட்டோம்.
எந்த நேரத்தில் அதிரடியாக விளையாட வேண்டும் என்பது குறித்து தெளிவாக கூறுவோம். டெஸ்ட் பொறுத்தவரை முதலில் சற்று நிதானம் காட்டவேண்டும். பிட்சின் தன்மை அறிந்து கொள்ள வேண்டும். ரிஷப் பண்ட் அணிக்கு செய்துவரும் பங்களிப்பு பற்றி நன்றாக தெரியும். திடீரென சில பந்துகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர். அந்த தன்மை அவரிடம் இருந்து பறித்து, புதிய மாதிரியாக விளையாட வேண்டும் என ஒருபோதும் கூறமாட்டேன். அதிரடி காட்ட சரியான நேரம் எது என்பதை மட்டும் அவரிடம் எடுத்துக் கூறுவோம் என தெரிவித்துள்ளார்.
English Summary
rahul dravid press meet about rishabh pant