விராட் கோலியின் பயோபிக்கில் நடிக்க விருப்பம் - நடிகர் ராம் சரண்.! - Seithipunal
Seithipunal


பிரபல தெலுங்கு நடிகரான ராம்சரண் RRR திரைப்படத்திற்கு பிறகு தற்போது உலக அளவில் பிரபலமாகியுள்ளார். இதில், அந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு பாடல் ஆஸ்கர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தற்போது அவர் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க தனக்கு ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அப்போது அவரிடம் விராட் கோலி பயோபிக்கில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் கண்டிப்பாக நடிப்பேன் ஏனென்றால் அவர் ஒரு சிறந்த ஊக்குமளிக்கும் வீரர். அவரது கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் ஏனென்றால் நானும் அவரைப் போலவே இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பயோபிக் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது ராம்சரண் ஆசை தெரிவித்துள்ளதால் விரைவில் உருவாகும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ram Charan wish to act Virat Kohli biopic


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->