ரஞ்சி டிராபி : தமிழ்நாடு அணி அறிவிப்பு.. முக்கிய வீரர் அணியில் இருந்து நீக்கம்.!! - Seithipunal
Seithipunal


ரஞ்சி டிராபி தொடர் வரும் ஜனவரி 13ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான அணியை ஒவ்வொரு மாநில கிரிக்கெட் வாரியம் அறிவித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தற்போது அணியை அறிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. இதற்கு முன்னதாக நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரில் கோப்பையை கைப்பற்றியது. ஆனால் கடந்த 2016-17 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை தொடரில் மட்டும் அரை இறுதி வரை தமிழ்நாடு அணி முன்னேறியது. அதற்கு பிறகு குரூப் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. இந்த வருடம் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஹசாரே தொடரின் இறுதி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் கார்த்திக் இடம்பெறவில்லை. மேலும், இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜனும் இடம்பெறவில்லை. காயத்தால் அவதிப்படும் நடராஜன் அடுத்த நான்கு வாரம் வரை கிரிக்கெட் விளையாட முடியாத நிலை இருப்பதால், அவர் அணியில் இடம்பெறவில்லை என தகவல் உள்ளது. 

தமிழக அணி : விஜய் சங்கர் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர் (துணைக்கு கேப்டன்), பி இந்திரஜித், பி அபராஜித், ஜெகதீசன், எம் ஷாருக்கான், பி சாய் சுதர்சன், பிரதோஷ ரஞ்சன் பால், எல் சூர்யபிரகாஷ், எம் கொளசிக் காந்தி, கங்கா ஸ்ரீதர் ராஜி, சந்தீப் வாரியார், எம் முகமது, ஆர் சிலம்பரசன், பி சரவணகுமார், ஏ அஸ்வின் கிறிஸ்ட், எல் விக்னேஷ், ஆர் சாய் கிஷோர், எம் சித்தார்த், ஆர் கவின்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ranji trophy tamilnadu cricket team


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->