டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.!
Ravichandran Ashwin 3000 runs and 400 wickets in test cricket
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
இதில், முதலில் நடைபெற்ற 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி தொடரை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றது.
இதில், வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 2-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.
இதில் 2வது சிறப்பாக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் 2 இன்னிங்ஸிலும் சேர்த்து 54 ரன்கள் மற்றும் 6 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் உலக அளவில் 3000 ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய 6வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்திய அணியின் கபில்தேவ், ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வார்னே, நியூசிலாந்து வீரர் ரிச்சர்ட் ஹார்ட்லி, தென்னாப்பிரிக்கா வீரர் ஷான் போலக் ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Ravichandran Ashwin 3000 runs and 400 wickets in test cricket