சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட் வீழ்த்தி இந்திய வீரர் அஸ்வின் சாதனை.! - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர் அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் ஸ்கேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று இரவு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் நாளின் பாதி நாளிலேயே 150 ரண்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கட்டுகளும் வீழ்த்தினார்.

இந்த நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். மேலும் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அதன்படி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 477 விக்கெட்டுகளும், ஒரு நாள் போட்டிகளில் 151 விக்கெட்டுகளும், டி20 போட்டிகளில் 72 விக்கெட்டும் எடுத்துள்ளார்.

இந்திய அணிக்காக அதிக விக்கெட் எடுத்தவர்கள்

அனில் கும்ளே - 953 விக்கெட்டுகள்

ஹர்பஜன் சிங் - 707 விக்கெட்டுகள்

ரவிச்சந்திரன் அஸ்வின் - 702 விக்கெட்டுகள்

கபில்தேவ் - 687 விக்கெட்டுகள்

ஜகிர் கான் - 597 விக்கெட்டுகள்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ravichandran Ashwin get 700 wickets in international cricket


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->