இலவு காத்த கிளி ஆர்சிபி கோப்பை கனவு! விராட் கோலியும் நானும் இதை செஞ்சுருந்தா 2016லயே ஆர்சிபி கோப்பை ஜெய்ச்சுருக்கும் !கே.எல்.ராகுல் ஓபன் டாக்! - Seithipunal
Seithipunal


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்றாலே, இன்றும் கோப்பையை வெல்லாத அணிகளின் பட்டியலில் தங்கள் பெயரை வைத்திருக்கும் ஏக்கத்தோடு நிற்கின்றது. ஒவ்வொரு சீசனிலும், "இசாலா கப் நம்தெ" என்ற உற்சாகக்குரலில் புறப்பட்டாலும், முடிவில் அதிர்ச்சிகளையும், ஏமாற்றங்களையும் தழுவிச் செல்கிறார்கள்.

2016 ஐபிஎல் சீசனின் ஃபைனல் இந்த ஏக்கத்தின் உச்சமாகவே திகழ்கிறது. அந்த ஆண்டில், விராட் கோலியின் அதிரடி தலைமையில் ஆர்சிபி அணி பல தடைகளை தாண்டி ஃபைனல் சுற்றை எட்டியது.

கோலி அப்போது 973 ரன்களை குவித்து, சாதனைகளை முறியடித்தார். ஆனால் ஃபைனலில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 208 ரன்கள் குவித்து, பெங்களூருவின் வெற்றிப் பயணத்தில் முட்டுக்கட்டையாக அமைந்தது.

கிறிஸ் கெயில் 76 ரன்கள் மற்றும் கோலி 54 ரன்களுடன் 114 ரன்களின் துவக்க கூட்டணியை அமைத்து எதிர்பார்ப்பை உச்சமட்டத்திற்கு உயர்த்தினாலும், பின்னர் வந்த நட்சத்திர வீரர்கள் அதே வேகத்தைத் தக்கவைக்க முடியாமல் போனார்கள். வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் அந்த கனவு நொறுங்கியது, ஆர்சிபி ரசிகர்களுக்கு மறக்க முடியாத வேதனையாகவே நிலைத்து நிற்கிறது.

சமீபத்திய பேட்டியில் கே.எல்.ராகுல், 2016 ஃபைனலின் நினைவுகளை பகிர்ந்தபோது, "நாங்கள் இருவரில் ஒருவர் கொஞ்ச நேரம் கூடுதலாக விளையாடியிருந்தால் அந்த கோப்பை எங்களுக்கு வந்திருக்கும்," என்று வருத்தத்துடன் கூறினார். "பெங்களூரு எனது சொந்த ஊர்; அந்த தோல்வியால் அவங்க கண்ணீர் கலந்த கைகளில் அந்த ஏக்கத்தை பார்த்தேன்," என்று ராகுல் உணர்ச்சியுடன் பகிர்ந்தார்.

2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி மீண்டும் அந்த முதல் கோப்பைக்காக போராடவிருக்கிறது. புதிய உற்சாகத்துடன் கோப்பையை வெல்லும் கனவுடன் இந்த பயணத்தைத் தொடங்கும் ஆர்சிபி, அவர்கள் பயணத்தின் இறுதியில் வெற்றி மகுடத்தைத் தன்னுடன் கொண்டுவருமா?


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RCB Cup Dream Virat Kohli and I will make it in Centurunda 2016 RCB Cup Jaychur kl Rahul Open Talk


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->