கிரிக்கெட்டில் எந்த கேப்டனும் செய்யாத சாதனையை செய்துள்ள ரோஹித் சர்மா..!
Rohit Sharma has achieved a feat that no captain has done in cricket
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அரையிறுதி ஆட்டம் துபாயில் நடைபெற்றது. முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. குறித்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.
265 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி 48.1 ஓவர்களில் 06 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 267 ரன்கள் எடுத்து 04 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதன் மூலம் இந்திய அணி தொடர்ந்து 03-வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. மொத்தம் 05-வது முறையாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதி போட்டிக்குள் இந்தியா நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்காரணமாக, ஐ.சி.சி.யின் அனைத்து வகையான போட்டி தொடரின் இறுதி போட்டிக்கும் அணியை அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.இதன் காரணமாக கிரிக்கெட் போட்டியில் இதுவரை பார்த்திராத சிறந்த கேப்டன்களில் ரோகித் உருவாகியுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

2023-ஆம் ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரை இந்தியா முன்னேறியது. எனினும், இறுதி போட்டியில் தோல்வியை தழுவியது. அதே ஆண்டில், ஒரு நாள் சர்வதேச உலக கோப்பை கிரிக்கெட் 2023 போட்டி தொடரில் தோல்வியே அடையாமல் இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதில்,06 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.
அடுத்ததாக 2024-ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை இறுதி போட்டியின் போது, ரோஹித்தின் திறமையான வழி நடத்தலில், 2007-ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன் முறையாக கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. இவ்வாறு ரோகித்தின் சாதனை பட்டியலில், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடர் மட்டும் மீதமிருந்தது. இதிலும், இந்த 2025 போட்டியிலும் இந்திய அணியை தலைமையேற்று தற்போது இறுதி போட் டி வரை கொண்டு சென்றுள்ளார்.
English Summary
Rohit Sharma has achieved a feat that no captain has done in cricket