பறிபோனது ஆர்சிபியின் கோப்பைக் கனவு - இறுதியாட்டத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான் அணி.! - Seithipunal
Seithipunal


கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கிய 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. பத்து அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதியது. 

இந்த ஆட்டத்தில் டாசில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி மற்றும் டு பிளெஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டு பிளெஸ்சிஸ் 17 ரன், கோலி 33 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். 

இதையடுத்து கேமரூன் க்ரீன் மற்றும் ரஜத் படிதார் ஆகியோர் களம் இறங்கினர். இதில் க்ரீன் 27 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில், RCB அணி 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தனர். இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - டாம் கோஹ்லர் களமிறங்கினர். இதில், டாம் கோஹ்லர் 20 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 45 ரன்னிலும் வெளியேறினார். 

தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய சாம்சன் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஜூரல் 8 ரன்னில் ரன் அவுட் ஆனார். 19-வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசிய பவல், கடைசி பந்தில் சிக்சர் அடித்து 174 ரன்கள் எடுத்து போட்டியை முடித்து வைத்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rojasthan toyals won the match


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->