உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்த முதல் தென்- ஆபிரிக்கா வீரர் ரியான் ரிக்கெல்டன்..! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கேப்டவுனில் நடந்து வருகிறது. 

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. மார்க்ரம் (17), வியான் முல்டர் (5), ஸ்டப்ஸ் (0) ஆகியோர் சொதப்பினர்.

கேப்டன் டெம்பா பவுமா மற்றும் ரியான் ரிக்கெல்டன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினர். அதில் பவுமா 106 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ரியான் ரிக்கெல்டன் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்தார்.

 10-வது டெஸ்டில் ஆடும் ரியான் ரிக்கெல்டன்-க்கு இது முதல் சர்வதேச இரட்டை சதம் ஆகும். இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இரட்டை சதம் பதிவு செய்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையை ரிக்கல்டன் பெற்றுள்ளார்.

2016-இல் தென் ஆப்பிரிக்காவிற்காக ஹசிம் அம்லா இரட்டை சதம் அடித்தார். அதன்பிறகு தற்போதுதான் தென் ஆப்பிரிக்கா வீரர் ஒருவர் இரட்டை சதத்தை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2016-க்கு பிறகு முன்னாள் கேப்டன்களான டீன் எல்கர் மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் இரட்டை சதத்தை பதிவு செய்வதற்கு மிக அருகில் வந்தனர். ஆனால் இருவரும் 199 ரன்களில் அவுட் ஆனார்கள். 

கடந்த ஆண்டு அக்டோபரில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரர் டோனி டி ஜோர்ஜி 177 ரன்கள் எடுத்திருந்தார்.

மேலும் 266 பந்துகளில் அதிவேக சதம் விளாசிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் பட்டியலில் இவர் 04-வது இடத்தைப் பிடித்தார்.

தென் ஆப்பிரிக்காவின் அதிவேக டெஸ்ட் இரட்டை சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில்;

211 பந்துகள் - ஹெர்ஷல் கிப்ஸ் vs பாகிஸ்தான், கேப் டவுன், 2003
238 பந்துகள் - கிரேம் ஸ்மித் vs வங்கதேசம், சிட்டகாங், 2008
251 பந்துகள் - கேரி கிர்ஸ்டன் vs ஜிம்பாப்வே, ஹராரே, 2001
266 பந்துகள் - ரியான் ரிக்கல்டன் vs பாகிஸ்தான், கேப் டவுன், 2025
267 பந்துகள் - ஜாக் காலிஸ் vs இந்தியா, செஞ்சுரியன், 2010


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ryan Rickelton double century in the history of the World Test Championship


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->