நாங்க எப்படா ரோல்ஸ் ராய்ஸ் கார் தரேன்னு சொன்னோம்.? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வீரர்.!
Saudi Arabia govt give rolls Royce car is fake news
2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றனர்.
இதில் கடந்த நவம்பர் 22ம் தேதி நடைபெற்ற லீக் சுற்று போட்டியில் உலகின் தலைசிறந்த அணியான அர்ஜென்டினாவை எதிர்த்து சவூதி அரேபியா விளையாடியது.
இந்த போட்டியில் கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக 2-1 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியா வெற்றிபெற்றது. உலக கால்பந்து அணிகளின் தரவரிசை பட்டியலில் 3 ஆம் இடத்தில் இருக்கும் அர்ஜென்டினாவை 51-வது இடத்திலிருக்கும் சவூதி அரேபியா வீழ்த்தியது கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியை கொடுத்தது.
இதனையடுத்து சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் அர்ஜென்டினாவிற்கு எதிரான சவூதி அரேபியாவின் வெற்றியை கொண்டாடும் விதமாக நவம்பர் 23ம் தேதி அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கும் விடுமுறையை அறிவித்திருந்தார்.
மேலும், சவுதி அரேபிய வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பின் போது ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படுகிறதா என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சவுதி அரேபிய கால்பந்து வீரர் சாலா அல்ஷெக்ரி மறுத்துள்ளார்.
English Summary
Saudi Arabia govt give rolls Royce car is fake news