இந்தியா அபார வெற்றி! முடித்துவைக்காமல் கிளம்பிய கோலி!
SAvIND 2nd test match result 2024 Siraj Bumrah virat kholi
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்து, தொடரை சமன் செய்துள்ளது.
கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸ் 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபாரமாகே பந்துவீசிய முகமது சிராஜ் 6 விக்கெட் எடுத்தார். பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து இந்திய அணி தந்து முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. விராட் கோலி 46 ரன்னும், ரோகித் சர்மா 39 ரன்னும், சுப்மன் கில் 36 ரன்னும் எடுத்தனர். மற்ற 7 வீரர்களும் டக் அவுட்டாகி வெளியேறினர்.
98 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை ஆட தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், இந்திய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென் ஆப்ரிக்க வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறினர்.
மறுமுனையில் மார்கிரம் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து சதமடித்து 106 ரன்னில் அவுட்டாக, இறுதியில், தென் ஆப்பிரிக்கா தனது 2வது இன்னிங்சில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட் எடுத்து அசத்தினார்.
இதனையடுத்து 79 ரன்கள் என்று எளிய வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியும் , 12 ஓவர்களில், 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றிபெற்றது.
கடைசி கட்டத்தில் விராட்கோலி அவுட்டாகி வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
English Summary
SAvIND 2nd test match result 2024 Siraj Bumrah virat kholi