ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த ஸ்காட்லாந்து...!
Scotland fell to Australia
டி20 2வது நாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிராக வென்று தொடரையும் கைப்பற்றியது ஆஸ்திரேலியா
அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்கிலிஸ் 46 பந்துகளுக்கு 103 ரன்கள் விளாசி அதிரடி காட்டினார்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆடி வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனிடையில் நேற்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது.
இதில் சிறந்த முறையில் ஆடி தங்களது அபார ஆட்டத்தை காட்டினார்கள் ஆஸ்திரேலியா அணி. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டை இழந்து 20 ஓவர்களில் 196 ரன்கள் குவித்தனர். இதில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்கிலிஸ்-ன் சதம் முக்கியபங்குவகித்தது.
197 ரன் எடுத்தால் தான் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய ஸ்காட்லாந்து அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 126 ரன்னில் ஆஸ்திரேலியாவிடம் சுருண்டது. இதனை தொடர்ந்து 70 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபாரமாக வெற்றி பெற்றது.
ஸ்காட்லாந்து அணி தரப்பில் ஆடிய மெக்முல்லன் அதிகபட்சமாக 42 பந்துகளை 59 ரன்கள் எடுத்திருந்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் தரப்பில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார் மார்க்ஸ் ஸ்டோய்னிஸ்.
இந்த வெற்றியை அடுத்து 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. ஆட்டநாயகன் விருதை ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்கிலிஸ் பெற்றார்.
இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் டி 20 போட்டி ஸ்காட்லாந்தில் இன்று நடைபெறவுள்ளது. ஸ்காட்லாந்து அணி ஆறுதல் வெற்றியை பெறுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
English Summary
Scotland fell to Australia