டிஎன்பிஎல் | சீகம் மதுரை பேந்தர்ஸ் சீருடை அறிமுகம்! - Seithipunal
Seithipunal


பால்சி திருச்சி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்,லைகா கோவை கிங்ஸ், நெல்லைராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ்மற்றும், சீகம் மதுரை பேந்தர்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்ளும் டிஎன்பிஎல் டி20, கிரிக்கெட் போட்டிகள் ஜுன் 12 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பேந்தர்ஸ் அணியின் சீருடை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது சிறப்பு விருந்தினராக புதுச்சேரி கிரிக்கெட் அணி தலைவர் தாமோதரன் கலந்து கொண்டார். அவர் கையால் சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டது. 2018-ம் ஆண்டு சாம்பியனான சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியின் மீது , இந்த ஆண்டுக்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளர் பத்மா தாமோதரன், முதன்மை செயல் அதிகாரிகள் பூஜா தாமோதரன், ரோஹித் தாமோதரன், மகேஷ் சுப்ரநேயன், ஸ்பான்சர்களான லியோ காஃபி நிர்வாக இயக்குநர் வேணு சீனிவாசன், மைபேப் 11 நிறுவனர் ஸ்வாதி சாமோலி, ஆகியோர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தின் நிறுவனரான பி.தாமோதரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது; சீகம் பேந்தர்ஸ் அணியை தொடங்கும் போது, எனது நிறுவன வாடிக்கையாளர்களையோ, நண்பர்களையோ எந்த காரணத்திற்காகவும் தொடர்பு கொள்ளக்கூடாது, என்று தான் முதன் முதலாக என் மகன் ரோகித்திடம் அழுத்தமாக கூறினேன்.

அதற்கேற்றபடி, எந்தவிதமான நிதி சிக்கலையும் சந்திக்காத படி எதிர் பார்த்த தொகையை விட அதிகமாக சேர்த்துள்ளனர். மற்ற அணிகள் உடன் ஒப்பிடும் போது, சீகம் பேந்தர்ஸ், எந்த வகையிலும் நிதி பற்றாக்குறையை சந்திக்கவில்லை.

இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில், தேவையான வீரர்களை தங்களுக்கான நிதி ஆதார மூலம் தேர்ந்தெடுத்துக் கொண்டது பாராட்டுக்குரியது எனக் கூறினார்.

லியோ காஃபி நிர்வாக இயக்குநர் வேணு சீனிவாசன் கூறும்போது “மதுரை பேந்தர்ஸ் அணியுடன் சேர்ந்து பயணிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. 2018-ல் தொடங்கிய இந்த பயணம், தற்போது 2023 ல் அணியின் பிரதான ஸ்பான்ஸராக இயங்கி வருகிறோம்.

ஃபில்டர் காபி மட்டும் செய்து கொண்டிருந்த, நாங்கள் தற்போது ரெடிமேட் டிக்காஷன், இன்ஸ்டன்ட் காபி போன்றவையும் அறிமுகம் செய்துள்ளோம். பிளாக் காபி தேவையும் அதிகரித்து வருகிறது. காபி அருந்தும் மக்களின் வட்டம் விரிவடைந்துள்ளது.

மதுரை பேந்தர்ஸ் அணியும், லியோ காஃபியும், ஒரு பாதையிலேயே பயணித்து வருகிறோம். தற்போது, டிஎன்பிஎல் தொடர் விளையாடும் நீங்கள், விரைவில் இந்திய அணிக்காக விளையாடும் தகுதி பெற வேண்டும், அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது, நீங்கள் செய்வீர்கள் இவ்வாறு அவர் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seegam Madurai Panthers Uniform Launch TNPL


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->