செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனை விருது.. ஐசிசி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசி மகளிர் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை பரிந்துரை பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டது. இதில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா மற்றும் பங்களாதேஷ் வீராங்கனை நிகர் சுல்தானா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அதேபோல் சிறந்த வீரருக்கான விருது பட்டியலில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனுமான முகமது ரிஸ்வான், இந்திய அணியின் ஆல்ரவுண்டரான அக்சர் படேல் மற்றும் ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டான கேமரூன் கிரீன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதேபோல் சிறந்த வீராங்கனையாக இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

September month ICC best player Awards


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->