செல்ஃபி எடுக்கலாம்! 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு!! ஷாகினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்? - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை லீக் சுற்றில் இந்தியா அணி பாகிஸ்தான் அணியை இன்று எதிர்கொள்கிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. 

பேட்டிங்கிற்கு சாதகமாக கருப்பு மணல் கொண்டு ஆடுகளம் தயார் செய்யப்பட்டுள்ளதால் இந்த ஆட்டம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த இரண்டு போட்டிகளில் காய்ச்சல் காரணமாக இடம்பெறாத சுப்மன் கில் இந்த போட்டியில் விளையாடுவதற்கு தயாராகி விட்டதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா நேற்று அறிவித்திருந்தார்.

இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையிலான இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பாகிஸ்தான் அணியும் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் பல்வேறு வியூகங்களை அமைத்துள்ளன. இதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு சென்ற பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அஃப்ரிடியிடம் செய்தியாளர் ஒருவர் செல்ஃபி எடுக்கலாமா? என கேட்டுள்ளார். 

அதற்கு அவர் "செல்ஃபி தானே! எடுக்கலாம் இந்தியாவுக்கு எதிராக இன்றைய போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு நிச்சயம் உங்களுடன் செல்பி எடுத்துக் கொள்கிறேன்! என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு ஷாகின் அப்ரீடியின் கூறியிருக்கும் இந்த பதில் போட்டிக்கான எதிர்பார்ப்பை மேலும் எகிறச் செய்துள்ளது. லாகின் அஃப்ரிடி ஓவர் கான்ஃபிடென்சில் இருப்பதாக இந்திய அணியின் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shakin Afridi says can take selfie after taking 5wickets against India


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->