ஐபிஎல் போட்டியில் வார்னரின் மாபெரும் சாதனையை தகர்த்த சுப்மன் கில்; மும்பைக்கு 197 வெற்றி இலக்கு..!
Shubman Gill breaks Warners great record in IPL
அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஆன குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை முதலில்தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் களமிறங்கினர். இதில் சுப்மன் கில் 38 ரன்கள் அடித்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இன்றைய போட்டியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 08 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை குவித்துள்ளது.

இந்த ஆட்டத்தில் சுப்மன் கில் 19 ரன்கள் அடித்திருந்த போது அகமதாபாத் மைதானத்தில் 1,000 ஐ.பி.எல். ரன்களை கடந்தார். இதன் மூலம் 20 இன்னிங்ஸ்களில் அவர் இந்த 1,000 ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 1,000 ரன்களை வேகமாக கடந்த வீரர்களின் சாதனை பட்டியலில் 02-வது இடத்தில் இருந்த டேவிட் வார்னரை (22 இன்னிங்ஸ்கள்) பின்னுக்கு தள்ளியுள்ளார்.
அந்த பட்டியல்:
01. கிறிஸ் கெயில் - 19 இன்னிங்ஸ்கள்
02. சுப்மன் கில் - 20 இன்னிங்ஸ்கள்
03. டேவிட் வார்னர் - 22 இன்னிங்ஸ்கள்
04. ஷான் மார்ஷ் - 26 இன்னிங்ஸ்கள்
English Summary
Shubman Gill breaks Warners great record in IPL