தோனி, சச்சின் வரிசையில் இணைந்த சவுரவ் கங்குலி.. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்!  - Seithipunal
Seithipunal


தோனி, சச்சின் வரிசையில் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையையும் படமாக எடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு கங்குலியும் ஒப்புதல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

 இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு சமீப காலங்களாக இந்தியாவில் படமாக்கப்பட்டு வருகின்றன. முதன் முதலில் ஏற்கனவே மகேந்திரசிங் தோனி வாழ்க்கை சினிமா படமாக வந்தது. இதையடுத்து சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கையையும் ஆவண படமாக வெளியிட்டனர். அதன்பின்னர் பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த மிதாலி ராஜ் வாழ்க்கையும் படமானது.

அந்த வரிசையில் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையையும் படமாக எடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என தகவல்வெளியாகியுள்ளது . இதற்கு கங்குலியும் ஒப்புதல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை பிரபல இயக்குநர் விக்ரமாதித்ய மோட்வானே இயக்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது .

இந்த திரைப்படத்தில் கங்குலியின் சிறுவயது வாழ்க்கை முதல் பி.சி.சி.ஐ. தலைவராக நியமிக்கப்பட்டது வரை உள்ள சம்பவங்கள் படத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்  கங்குலி வேடத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் தேர்வாகி இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sourav Ganguly joins MS Dhoni and Sachin Tendulkar Shooting will start soon


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->