ஐபிஎல்லில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் கலந்து கொள்வதில் சிக்கல்? காரணம் என்ன.? - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்குகிறது.

இதனிடையே ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் கடந்த டிசம்பர் 25ம் தேதி கொச்சியில் நடைபெற்றது. இந்த நிலையில் 16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 70 போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில், மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இதனையடுத்து நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு அணியும் நடப்பாண்டுக்கான சீருடையை அறிமுகம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடரில் தென்னாப்பிரிக்க வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, தென் ஆப்ரிக்கா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதன்காரணமாக தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் ஏப்ரல் 2ம் தேதிக்கு பிறகு தான் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார்கள் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா வீரர்களின் ஐபிஎல் அணிகள்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிக் க்ளாசன் (வி.கீ) மார்கோ யான்சென்.

டெல்லி கேப்பிடல்ஸ் - அன்ரிச் நோர்க்யா, லுங்கி இங்கிடி

குஜராத் டைட்டன்ஸ் - டேவிட் மில்லர்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குயின்டன் டி காக்

மும்பை இந்தியன்ஸ் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் - ககிசோ ரபடா


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Africa players after April 3 join IPL 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->