2023 ஒரு நாள் உலகக் கோப்பைக்கு தென்னாபிரிக்கா அணி நேரடித் தகுதி.!
South africa qualified 2023 oneday world Cup
2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கு தென்னாப்பிரிக்க அணி நேரடி தகுதி பெற்றுள்ளது.
2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த வகையில் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 48 லீக் போட்டிகளும், 3 நாக்அவுட் போட்டிகள் உட்பட மொத்தம் 51 போட்டிகள் நடைபெற உள்ளது.
இதில், 2023 உலக கோப்பை தொடருக்கு ஏற்கனவே இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய 7 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 8வது அணியாக தற்போது நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
முன்னதாக நேற்று நடைபெற்ற வங்கதேசம் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கு அயர்லாந்து அணி நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
மேலும், மீதமுள்ள 2 அணிகளுக்கு வரும் ஜூன் மாதம் ஜிம்பாவேவில் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த தகுதி சுற்றி போட்டிகளில் அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு எபிரேட்ஸ், நேபாளம், ஓமன் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய 10 அணிகள் விளையாடுகின்றன. இதில் 2 அணிகள் 2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
South africa qualified 2023 oneday world Cup