ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிட்டன் | கால் இறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை பிவி சிந்து!  - Seithipunal
Seithipunal


ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிட்டன் தொடரில், இந்திய வீராங்கனை பிவி சிந்து கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

2023-ம் ஆண்டிற்கான ஸ்பெயின் மாஸ்டர் பேட்மிட்டன் போட்டிகள், அந்நாட்டின் மாட்ரிட் நகரில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, இந்தோனேசியாவை சேர்ந்த வர்த்தானியுடன் மோதினார் இந்த போட்டியில் பிவி சிந்து 21_14 21_16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் கால் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார். 

இந்தியாவின் வெற்றிகரமான விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவரான பிவி சிந்து ஒலிம்பிக் மற்றும் பி டபிள்யு எப் சர்க்யூட் போன்ற பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார்.

2019 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் உட்பட பேட்மிட்டன் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் மற்றும் ஒரே இந்தியர் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு பதக்கங்களை வென்ற இந்தியாவின் இரண்டாவது தனிப்பட்ட தடகள வீராங்கனை என்ற சாதனைகளையும் தன் வசம் வைத்துள்ளார் வீராங்கனை பிவி சிந்து.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Spain Masters Badminton 2023 PV Sindhu quarter finals


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->