ஸ்குவாஷ் உலகக் கோப்பை.. எகிப்து அணி சாம்பியன்.!
Squash world Cup 2023 Egypt champion
சர்வதேச ஸ்குவாஷ் சம்மேளனம், இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டியை நடத்தின.
இந்த போட்டிகள் சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் மால், நேரு பார்க்கில் உள்ள இந்திய ஸ்குவாஷ் அகாடமி உள்ளரங்கு மைதானத்தில் கடந்த 15ம் தேதி தொடங்கி நிலையில் இன்று (ஜூன் 17ஆம் தேதி) வரை நடைபெற்றது.
இந்த உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. அந்த வகையில் இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 'ஏ' பிரிவில் எகிப்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா, மலேசியா, ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் இந்தியா, தென்னாபிரிக்கா, ஜப்பான், ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம் பெற்றது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் மலேசியா - எகிப்து அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் எகிப்து அணி 4-1 என்ற கணக்கில் மலேசியா அணியை தோற்கடித்தது.
இதன் மூலம் ஸ்குவாஷ் உலக கோப்பையை எகிப்து அணி தட்டிச் சென்றது. ஸ்குவாஷ் உலகக்கோப்பையில் இந்தியா, ஜப்பான் அணிகள் மூன்றாம் இடம் பிடித்தன.
English Summary
Squash world Cup 2023 Egypt champion