கடைசி ஓவர்களில் திரில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ்.. தெறிக்கவிட்ட ரஷித் கான்.!!
SRH vs GT Match GT Win
ஐபிஎல் 15-வது சீசனின் 40வது லீக் போட்டியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா 42 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அசத்தினார். மார்க்கரம் 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். ஷாசாங் சிங் 6 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சாஹா 38 பந்துகளில் 68 ரன்களை எடுத்து அசத்தினார். ஷுப்மன் கில் 22 ரன், ஹார்திக் பாண்டியா 10 ரன்களில் வெளியேறினர். இதையடுத்து, ராகுல் தேவத்தியா, ரஷித் கான் இருவரும் ஜோடி சேர்ந்து ரன்களை குவிக்க தொடங்கினர். இறுதியில் 6 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்ட போது, மார்கோ யான்சன் வீசிய முதல் பந்தை ராகுல் தேவத்தியா சிக்சர் அடித்தார். அடுத்த இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார்.
கடைசி ஓவர் மூன்றாவது பந்தை ரஷித் கான் சிக்ஸர் அடித்தார். இறுதியில், 3 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி 2 பந்துகளில் சிக்சர் அடித்தால் குஜராத் அணி 20 ஓவரில் 199 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ரஷித் கான் 11 பந்துகளில் 31 ரன் எடுத்தார். ராகுல் தேவத்தியா 31 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சார்பில் உம்ரான் மாலிக் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.