இலங்கை அணியை தெறிக்கவிட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள்.. இந்திய அணி அபார பந்துவீச்சு.! - Seithipunal
Seithipunal


இலங்கைக்கு எதிரான இரண்டாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அணி முதல் இன்னிங்சில் 86  ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று 2 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியை பகலிரவு போட்டியாகும். இந்த போட்டியை காண 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் ரசிகர்களின் ஆரவாரம் வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுக்கும்.

இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். மேலும், இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடிய ஜெயந்த் யாதவ் நீக்கப்பட்டு அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். 

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த  இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் - 92, பண்ட் - 39, விஹாரி - 31, கோலி - 23 ரன்கள் எடுத்தனர். இலங்கை பந்து வீச்சில் எம்புல்டனியா 3 விக்கெட்டுகளும், ஜெயவிக்ரமா 3 விக்கெட்களும், தனஞ்சய டி சில்வா 2 விக்கெட், லக்மல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 86 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ் 43 ரன்கள் எடுத்தார். இந்திய பந்துவீச்சில் பும்ரா 3 விக்கெட்களும், முகமது சமி 3 விக்கெட்களும், அக்ஷர் படேல் 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilanka 1St innnings 86 for 6 wickets


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->