#AsiaCup2022 :  இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணி.. நடனமாடி கொண்டாடிய வீராங்கனைகள்.! - Seithipunal
Seithipunal


ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் 2வது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைப்பெற்று வருகிறது. ஐக்கிய அமீரகம், மலேசியா, தாய்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, வங்கதேசம் ஆகிய 7 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன.

ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இந்த நிலையில் மதியம் 1:30 நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதனையடுத்து ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி  அக்டோபர் 15ம் தேதி மதியம் 1 மணிக்கு நடைபெறுகிறது. இதில், இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணியினர் க்யூட்டாக நடனமாடி கொண்டாடினர். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilanka women team dance celebrate after reach Asia Cup final


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->