இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் - உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பத்து அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதையடுத்து இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் உள்ளிட்ட அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து, ஐதராபாத் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். அபிஷேக் 12 ரன்களிலும் அடுத்துவந்த திரிபாதி 37 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து வந்த மார்க்ரம் 1 ரன்னிலும், தொடக்க வீரர் ஹெட் 34 ரன்களிலும் அவுட் ஆனார். 

இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - டாம் கோலர் காட் மோர் களமிறங்கினர். இதில், டாம் 10 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 42 ரன்களிலும் அவுட் ஆனார்.

ஆனால், ஐதராபாத் அணியின் சிறப்பான பந்து வீச்சால் ராஜஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்சை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபார வெற்றிபெற்றது.

இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடர் இறுதிப்போட்டிக்குள் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாட இருக்கின்றனர். இந்தப் போட்டி வரும் ஞாயிற்றுகிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sunrisers hydrabad going to final in ipl match


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->