பிரபல கிரிக்கெட் வீரருக்கு அறுவை சிகிச்சை - நடந்தது என்ன?
surgery to cricket player rashit khan
தற்போது நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி மொத்தம் ஒன்பது லீக் போட்டிகள் விளையாடியது. இந்த போட்டியில், நான்கு வெற்றிகள் மற்றும் ஐந்து தோல்விகளை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட அணிகளை பின்னுக்குத் தள்ளி ஆறாவது இடத்தில் இருந்தது.
இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருப்பினும், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாத ஆப்கானிஸ்தான் அணி லீக் போட்டிகளை முடித்துகொண்டு தாய் நாடு கிளம்பியது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ரஷீத் கானுக்கு முதுகில் காயம் ஏற்பட்டதால் அவர் ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் லீக் தொடரான பிபிஎல் போட்டியிலும் விளையாட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில், ரஷீத் கானுக்கு இன்று முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தது. இப்போது குணமடையும் சூழலில் இருக்கிறேன். மீண்டும் களத்தில் இறங்க என்னால் காத்திருக்க முடியாது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
English Summary
surgery to cricket player rashit khan