டி20 உலகக்கோப்பை 2022-ன் முதல் சதம்! 7 பவுண்டரி, 8 சிக்ஸர் - மரண அடி வாங்கிய அணி!
T20 World Cup 2022 first Century
தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க வீரர் ரூசோவ் அதிரடியான சதத்தை (109 ரன்) அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. இதில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு அணியில் மீண்டும் இணைந்த ரூசோவ் 56 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இதன்மூலம் அடுத்தடுத்த டி20 ஆட்டங்களில் சதங்களை அடித்த முதல் வீரர் என்கிற சாதனையையும் அவர் படைத்துள்ளார். மற்றொரு வீரரான குயிண்டன் டி காக் 38 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை எதிர்கொண்ட வங்கதேச அணி, 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.
104 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி பெற்றது. பந்து வீச்சில் நோர்கியா 4 விக்கெட்டுகளும், ஷம்சி 3 விக்கெட்டுகளும் எடுத்து வெற்றிக்கு விதித்தனர்.
English Summary
T20 World Cup 2022 first Century