#BigBreaking | பாகிஸ்தான் போராடி தோல்வி - வெற்றி வாகை சூடிய ஜிம்பாவே! வெளியேறுகிறதா பாகிஸ்தான்?!
T20 World Cup 2022 PAKvZIM
டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டங்களில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகள் மோதின.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் இந்த ஆட்டம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்தது.
இதனையடுத்து 131 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சு நேர்த்தியால் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் பாபர் அசாம் 4 ரன்னுக்கும், ரிஸ்வான் 14 ரன்னுக்கும், அகமதுவும் 5 ரன்னுக்கும் நடைகட்டினர்.
அடுத்து களமிறங்கிய ஷான் மசூத் 44 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 11 ரன் அடிக்க வேண்டிய நிலையில், பாகிஸ்தான் அணி முதல் 5 பந்துகளில் ஒரு விக்கெட்டை இழந்து 8 ரன்கள் எடுத்தது.
கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணி ஒரு ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. யாருமே எதிர்பார்காத நிலையில் ஜிம்பாபே அணி அசத்தலான ஒரு வெற்றியை பெற்றுள்ளது.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்து உள்ளதால், அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு 99% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
T20 World Cup 2022 PAKvZIM