டி20 உலகக்கோப்பையில் எந்தெந்த அணிகளுக்கு எவ்வளவு பரிசுத் தொகை.. முழு விபரம்.!
T20 World Cup 2022 prize amounts
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி 13.84 கோடியை பரிசாக வென்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி 13.84 கோடியும், தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி 7.40 கோடியும் பரிசாக வென்றுள்ளது.
அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு 4.50 கோடியும், நியூசிலாந்து அணி 4.19 கோடியும் பரிசுத்தொகையாக பெறுகின்றன. நியூசிலாந்தை விட இந்திய அணி குரூப்-12 சுற்று போட்டியில் கூடுதலாக வெற்றியை பெற்றதால், அதிக தொகையை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் டி20 உலகக்கோப்பையில் முதல் சுற்று மற்றும் குரூப்-12 சுற்று போட்டிகளில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் அந்தந்த அணிகளுக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
டி20 உலகக்கோப்பையில் எந்தெந்த அணிகளுக்கு எவ்வளவு பரிசுத் தொகை
இங்கிலாந்து (சாம்பியன்) - 13.84 கோடி
பாகிஸ்தான் ( 2வது இடம்) - 7.40 கோடி
இந்தியா (அரையிறுதி) - 4.50 கோடி
நியூசிலாந்து (அரையிறுதி) - 4.19 கோடி
இலங்கை - 1.85 கோடி
நெதர்லாந்து - 1.85 கோடி
ஆஸ்திரேலியா - 1.53 கோடி
அயர்லாந்து - 1.53 கோடி
தென்னாப்பிரிக்கா - 1.2 கோடி
பங்களாதேஷ் - 1.2 கோடி
ஜிம்பாப்வே - 88.50 லட்சம்
வெஸ்ட் இண்டீஸ் - 64.40 லட்சம்
ஐக்கிய அரபு அமீரகம் - 64.40 லட்சம்
ஸ்காட்லாந்து - 64.40 லட்சம்
நமீபியா - 64.40 லட்சம்
ஆப்கானிஸ்தான் - 56.35 லட்சம்
English Summary
T20 World Cup 2022 prize amounts