டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் - ஷேன் வாட்சன்.! - Seithipunal
Seithipunal


ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில் சூப்பர் 12 சுற்றுகளின் முடிவில் குரூப்-1 பிரிவு புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அதனைத் தொடர்ந்து நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளும், நவம்பர் 10ம் தேதி நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து  அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதவே அனைவரும் விரும்புவார்கள். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. அதேபோன்ற மோதலை மீண்டும் ரசிகர்கள் காண ஆர்வமாக உள்ளனர்.

எல்லா தொடர்களிலும் சில நேரங்களில் ஒரு அணி வெளியில் செல்வது போல சென்று போராடி இறுதி போட்டிக்குள் நுழைந்து கோப்பையையும் வெல்லும். குறிப்பாக இந்த முறை பாகிஸ்தான் அணியினர் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள் என எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் இந்த தொடரில் சில போட்டிகளில் அவர்கள் விளையாடிய விதம் அவ்வாறு இருந்தது. தற்போது அரையிறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தான் அணியால் நியூசிலாந்து அணிக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

T20 World Cup final will be India vs Pakistan Shane Watson


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->