பாகிஸ்தானை அலறவிட்டுக் கொண்டிருக்கும் ஜிம்பாபே - மரண அடி விழுமோ?!
T20 World Cup PAKvZIM
டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டங்களில் இன்று மூன்று ஆட்டங்கள் : அதில், முதல் ஆட்டத்தில் கங்காளதேஷ் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாவது ஆட்டத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. புள்ளி பட்டியலிலும் முதலிடத்தில் இந்திய அணி உள்ளது.
மூன்றாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பெரும் எதிர்பார்ப்புகளுடன் இந்த ஆட்டம் தொடக்கி நடந்து கொண்டிருக்கிறது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்தது.
ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் எர்வின் 19 ரன்னிலும், மாதேவீர் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து மில்டன் ஷம்பா 8 ரன்னிலும், சிக்கந்தர் ராசா 9 ரன்னிலும் அவுட்டாகினர்.
சீன் வில்லியம்ஸ் மட்டும் 31 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 131 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிதான்.
ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சு நேர்த்தியாக இருந்ததால் தொடக்க ஆட்டக்காரர்கள் தடுமாறினர். இதில், கேப்டன் பாபர் அசாம் 4 ரன்னுக்கும், ரிஸ்வான் 14 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய அகமதுவும் 4 ரன்னுக்கு நடையை கட்டினார். 8 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்த பாகிஸ்தான் அணி வெறும் 36 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி ஆடி வருகிறது.
தற்போதுவரை அந்த அணி 11.4 ஓவர்களில், 3 விக்கெட் இழப்பிற்கு, 68 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. வெற்றிக்கு 50 பந்துகளில் 63 ரன்கள் எடுக்க வேண்டும்.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு 90% குறையும் என்பது குறிப்பிடத்தக்கது