குமார் சங்கக்கார, பீட்டர்சன் சாதனைகளை முறியடித்த தமிழக வீரர்.! தொடர்ந்து 5 சதங்கள் எடுத்து உலக சாதனை.!
Tamil Nadu player scored 5 consecutive centuries a world record
குமார் சங்கக்கார, பீட்டர்சன் இவர்களின் சாதனைகளை முறியடித்து ஆடவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ந்து 5 சதங்கள் எடுத்து தமிழக வீரர் ஜெகதீசன் உலக சாதனை படைத்துள்ளார்.
கர்நாடகா பெங்களூரில் நடைபெறும் விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் தமிழகமும் அருணாச்சல பிரதேசமும் மோதி வருகின்றன. டாஸ் வென்ற அருணாச்சல பிரதேச அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்நிலையில் இதற்கு முன்பு தொடர்ச்சியாக 4 சதங்கள் எடுத்த தமிழக வீரர் ஜெகதீசன் இன்று தனது தொடர்ச்சியான 5-வது சதத்தை எடுத்து புதிய உலக சாதனை படைத்தார். மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
மற்றொரு தொடக்க வீரரான சாய் சுதர்சனும் சதமடித்தார். இந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் சாய் சுதர்சன் எடுத்துள்ள 3-வது சதம் இதுவாகும். இந்நிலையில், தமிழக அணி 31 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 305 ரன்கள் எடுத்துள்ளது. ஜெகதீசன் 182, சாய் சுதர்சன் 116 ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள்.
English Summary
Tamil Nadu player scored 5 consecutive centuries a world record