தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி; ஆறு தங்கம் வென்ற தமிழக வீரர்கள்..!
Tamil Nadu players won six gold medals in the National Para Athletics Championship
தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழகத்துக்கு ஆறு தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப்பின் 23வது சீசன் சென்னையில் நடக்கிறது. இரண்டாவது நாளான நேற்று 71 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில் பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் கிரண் ஸ்ரீராம் (22.45 வினாடி) தங்கப்பதக்கம் கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர், 400 மீ., ஓட்டத்திலும் தங்கம் (1 நிமிடம், 23.94 வினாடி) வென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, ஆண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் ரமேஷ் சண்முகம் (1:47.63), மணிகண்டன் (2:08.12), தங்கம், வெள்ளி வென்றுள்ளனர். மேலும், ஆண்களுக்கான குண்டு எறிதலில் (எப்.35) தமிழகத்தின் பிரசாந்த் சுந்தரவேல், 9.37 மீ., துாரம் எறிந்து தங்கம் கைப்பற்றியுள்ளார். குண்டு எறிதல் எப்.55 பிரிவில் தமிழகத்தின் முத்துராஜா (10.67 மீ.,) தங்கம் வென்றுள்ளார்.
அடுத்ததாக, குண்டு எறிதல் எப்.41 பிரிவில் தமிழகத்தின் மனோஜ் சிங்கராஜா (8.94 மீ.,) தங்கம் வென்றுள்ளார். ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் ஷேக் அப்துல்கபூர் (6.69 மீ.,) இரண்டாவது இடம் பெற்று, வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
English Summary
Tamil Nadu players won six gold medals in the National Para Athletics Championship