ஐபிஎல் 2024: அபிஷேக் சர்மாவுக்கு 'ஆட்ட நாயகன்' விருது வழங்கிய முதலமைச்சர்.! - Seithipunal
Seithipunal


 ஐபிஎல் தொடரின் 18 ஆவது லீக் ஆட்டத்தில் மோதிய சென்னை-ஹைதராபாத் போட்டியை தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நேரில் பார்த்து உற்சாகப்படுத்தினார். 

முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 19.1 ஓவரில் 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 37 ரன்கள் அடித்த அபிஷேக் ஷர்மாவுக்கு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி 'ஆட்டநாயகன்' என்ற விருதை வழங்கினார். 

மேலும் ஹைதராபாத் அணி நிர்வாகம் அதிரடியாக விளையாடிய வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கி வருகிறது. இதற்கிடையே சிஎஸ்கே அணியில் துபே அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana cm gives award Abhishek Sharma


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->