சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்த பெருமையை பெற்ற வங்க தேச வீரர்! - Seithipunal
Seithipunal


சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து, வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹிம் ஓய்வு பெறுவதாக கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்தார். அப்போது ஆசியக் கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணி இலங்கையிடம் தோற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியதைத் தொடர்ந்து அவர் ஓய்வை அறிவித்தார்.

தான் ஆசைப்பட்டு இந்த முடிவினை எடுக்கவில்லை என்று முஷ்ஃபிகுர் ரஹிம் கூறியது சர்ச்சையை கிளப்பியது. கடந்த 2005ஆம் ஆண்டு வங்கதேச அணிக்காக அறிமுகமான முஸ்பிஹூர் ரஹீம், வங்கதேச அணியின் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்.

தற்போது முஸ்பிஹூர் ரஹீம், 89-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வங்கதேச கிரிக்கெட் வீரர் என்ற பெருமை பெற்றவரும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்  தனது 11ஆவது சதத்தை நிறைவு செய்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்த 2வது வங்கதேச வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Bangladeshi player who got the honor of crossing 15,000 runs in international cricket


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->