கால்பந்து ரசிகர்களுக்கான மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது கத்தார் அரசு! - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு இது கட்டாயம் இல்லை!

22 ஆவது பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் நவம்பர் 20ஆம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. இந்த கால்பந்து போட்டியில் 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும். இதில் உலக கோப்பை நடத்தும் கத்தார் ஈகுவாடர் அணிகள் நவம்பர் 20ஆம் தேதி மோதுகின்றன.

உலக கோப்பை போட்டியை காண வரும் ரசிகர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என கத்தார அரசு அறிவித்துள்ளது. ஆனால் பாதுகாப்பான சூழலை மீறுபவருக்கு போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். கொரோனா தொற்று பரவ தொடங்கினால் வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் பாதுகாப்பான பயோ பப்பில் கட்டாயப்படுத்தப்படலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மேலும் நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கும் போட்டியை காண வரும் வெளிநாட்டு பயணிகள் விமான பயணம் மேற்கொள்ளும் முன்பு ஆறு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் பெற்று இருக்க வேண்டும் என கத்தார் அரசு தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The government of Qatar announced the happy news for football fans


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->