பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்..? ராபின் உத்தப்பா..! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் 1-3 (05 போட்டிகள்) என்ற கணக்கில் இந்திய அணி 10 வருடங்களுக்கு பின்னர்  தோல்வியை தழுவி கோப்பையை பறிகொடுத்தது.

இதன் காரணமாக இந்திய அணியின் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த தோல்விக்கு இந்திய முன்னணி வீரர்கள் பேட்டிங்கில் ஜொலிக்காதது பின்னடைவாக பார்க்கப்பட்டது. அத்துடன், முதல் டெஸ்டில் பேட்டிங்கில் வெற்றி பெற்ற இந்தியா, அதற்கடுத்த போட்டிகளில் சொதப்பியதால் தோல்வியை தழுவியது.

குறிப்பாக அழுத்தமான சூழ்நிலைகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியில் தோல்விக்கு முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுளார்.

"ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் அனுபவ வீரரான புஜாராவை தேர்வு செய்து அழைத்து செல்லாதது மிகப்பெரிய தவறாக மாறியுள்ளது. அப்படி ஒருவேளை புஜாராவை நீங்கள் தேர்வு செய்யாதபோது அவருக்கு இணையாக விளையாடும் ஹனுமா விஹாரியை கூட தேர்வு செய்திருக்கலாம். அவரால் புஜாராவின் இடத்தை பூர்த்தி செய்து விளையாடிருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அது போன்ற ஒரு வீரரையும் இந்திய அணி இந்த தொடரில் தேர்வு செய்யவில்லை. ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களில் நீண்ட நேரம்  நிலைத்து நின்று விளையாடக்கூடிய அனுபவ வீரர்கள் இந்திய அணிக்கு அவசியம் தேவைப்படுவர்.

ஆனால் புஜாரா  போன்ற ஒரு வீரரை அணியில் தேர்வு செய்யாதது இந்திய அணி செய்த தவறு" என்று தனது ஆதங்கத்தை ராபின் உத்தப்பா வெளிப்படுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The main reason for the Indian team's defeat in the Border Gavaskar Trophy Robin Uthappa


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->