ராஜஸ்தான் பயிற்சியாளர் பதவியை ஏற்க இதுதான் காரணம் - ராகுல் டிராவிட்! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்,  தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


டிராவிட் தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு ஐ.சி.சி. தொடர்களில் இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளார். மேலும், இந்திய அணியின் கேப்டனாக செய்ய முடியாத சாதனையை, பயிற்சியாளராக செய்து ராகுல் டிராவிட் அசத்தியுள்ளார்.  2007-ல் ஒருநாள் உலகக்கோப்பையில் தோல்வியை சந்தித்த அதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இம்முறை டிராவிட் பயிற்சியாளராக டி20 உலகக்கோப்பையை வென்று அசத்தினார்.

இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படுவார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. 


இந்நிலையில் பதவி நியமனம் குறித்து கருத்து கூறியுள்ள ராகுல் டிராவிட், ராஜஸ்தானுக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருக்கிறது என்றும், அதனாலேயே கொல்கத்தாவை தாண்டி ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் ஜாக் மற்றும் இயக்குனர் குமார் சங்ககாரா ஆகியோர் கேட்டதும் பயிற்சியாளர் பதவியில் செயல்பட ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார். 


இதற்கிடையே 2012, 2013 ஐபிஎல் தொடர்களில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக டிராவிட் விளையாடினார். மேலும் 2014, 2015 வருடங்களில் ராஜஸ்தான் அணியின் இயக்குனர் மற்றும் ஆலோசகராகவும் டிராவிட் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

This is the reason for taking over as Rajasthan coach Rahul Dravid


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->