பரபரப்பு செய்தி!!! கள்ளச் சந்தையில் விற்ற IPL போட்டிக்கான டிக்கெட்கள்...! - 11 பேர் கைது - Seithipunal
Seithipunal


IPL 2025 : 18 வது சீசன் கிரிக்கெட் தொடரில், சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து CSK 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடியது.

இதில் 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 25 ரன் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், நேற்றைய ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்றது குறித்து 11 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக திருவல்லிக்கேணி காவலர்கள் 10 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, 34 டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.இனிவரும் போட்டிகளின்போது இதுபோன்றவை நடக்காமல் இருக்க மேற்கொண்ட  நடவடிக்கை காவலர்கள் எடுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tickets for IPL match sold fake market 11 people arrested


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->