ஒருநாள் தொடரை கைப்பற்ற போவது யார்.? இன்று இந்தியா-இங்கிலாந்து கடைசி ஒருநாள் போட்டி.!
Today IND vs ENG 3rd oneday international
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டி20 தொடரை இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதனைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை 2 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில், முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து பேச்சாளர்கள் வீசிய பந்துகளில் தாக்குப் பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெடுகளை பறிகொடுத்தனர்.
இங்கிலாந்து அணி 25.2 ஓவருக்கு 110 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 114 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து, இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 100 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் 1 - 1 என சமநிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. அதன்படி, மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது.
ஒரு நாள் தொடரை கைப்பற்ற இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Today IND vs ENG 3rd oneday international