இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்.. இந்திய அணியில் அதிரடி மாற்றம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று 2 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை பகலிரவு போட்டியாகும். இந்த போட்டியை காண 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் ரசிகர்களின் ஆரவாரம் வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுக்கும். 

இந்நிலையில், காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா தொடர் மற்றும் டெஸ்ட் இண்டீசுக்கு அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இடம் பெறாத சுழற்பந்து வீச்சாளரும்,  ஆல்- ரவுண்டருமான அக்‌ஷர் பட்டேல் காயத்தில் இருந்து மீண்டு முழு உடல் தகுதி இருப்பதால், அவர் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.  சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு உள்ளார்.  ஆகையால் இன்று இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today ind vs sl 2nd test match


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->