#RR vs PBKS : பிளேஆப் சென்ற மகிழ்ச்சியில் தொடர் தோல்வியில் இருந்து மீளுமா ராஜஸ்தான் அணி!!
Today ipl match rr vs pbks
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர்ந்து இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. கொல்கத்தா அணியும் ராஜஸ்தான் அணியும் பிளே ஆப் சுற்றுக்குள் சென்று விட்டனர். 3,4 இடத்திற்கு யார் வருவார்கள் என்ற போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அதிக வாய்ப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
அந்த வகையில், 65வது லீக் போட்டியில் பிளேஆப்குள் நுழைந்த ராஜஸ்தான் அணியும் பிளே ஆப் வாய்ப்பை இழந்த பஞ்சாப் அணியும் மோதுகின்றன. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ராஜஸ்தான் அணி கடந்த போட்டியில் சென்னை அணியுடன் விளையாடி தோல்வி பெற்றது. இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 8 வெற்றியும் 4 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியல் இரண்டாவது இடத்தில் உள்ளது. பிளே ஆப் வாய்ப்பை இழந்த பஞ்சாப் அணி கடந்த போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதி 62 வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.
English Summary
Today ipl match rr vs pbks