சதம் விளாசிய ஹெட்.. விக்கெட் எடுக்க திணறும் இந்திய அணி.. வலுவான நிலையில் ஆஸ்திரேலியா..!! - Seithipunal
Seithipunal


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். வேகப்பந்து வீச்சுக்கு மைதானம் சாதகமாக இருக்கும் என்பதால் முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் என 4 வேகப்பந்து வீச்சாளர்களும், சூழற்பந்து வீச்சாளர் ரவிந்திர ஜடேஜா உடன் இந்திய அணி களம் இறங்கியது.

ஆஸ்திரேலிய அணியில் ஓபனிங் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற டேவிட் வார்னர் 43 ரன்களும், மார்னஸ் லபுஸ்சேன் 26 ரன்களும் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஆஸ்திரேலியா அணி 24.1 ஓவரில் 76 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் இணைந்து பொறுப்புடன் விளையாடத் தொடங்கினர். ஸ்மித் டெஸ்ட் மேட்ச் போல் ஆட, ஹெட் ஒன்டே மேட்ச் போல அதிரடியாக ரன்களை சேர்த்தார்.

ஹெட் பந்துகளுக்கு இணையாக ரன்களை சேர்த்ததால் ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 106 பந்துகளில் ஹெட் சதம் அடிக்க, 40 ஓவர்களை கடந்து இந்த ஜோடி சிறப்பாக ஆடி வருகிறது. அவர்களின் பார்ட்னர்ஷிப் பிரிக்க முடியாமல் இந்திய அணி பவுலர்கள் திணறி வருகின்றனர். தற்போது ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Travis Head scored a century in WTC final against India


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->